பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 41

இக்கால நாயன்மார். (1) திருநாவுக்கரசர், (2) திருஞான சம்பந்தர் (3) சிறுத்தொண்டர், (4) திருநீல கண்ட யாழ்ப்பாணர், (5) முருக நாயனார், (6) குங்கிலியக்கலயர், (7) நீலநக்கர், (8) நெடுமாறர், (9) மங்கையர்க் கரசியார், (10) குலச்சிறையார், (11) அப்பூதி அடிகள் என்ற பதினொரு வரும் இக்காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

அப்பர் - சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலம் (கி.பி. 661 - 840)

பரமேச்வர வர்மன் (கி.பி. 870-685). இக்காலப் பல்லவ அரசருள் முதல்வன் பரமேச்வர வர்மன். இவன் சிறந்த சிவபக்தன் உருத்திராக்கம் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப்பட்ட முடியை அணிந்த பெரும் பக்தன். கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கற்கோவில் கட்டிய முதற் பல்லவன் இவன். இவன் இங்ஙனம் சிவன் கோவில் ஒன்றைக் கூரத்திற் கட்டிப் பட்டயம் விடுத்தவன் மகாபலிபுரத்து ஒற்றைக் கல் கோவில்களில் உள்ள மேல் அடுக்கு இவன் காலத்திற் குடையப்பட்டது. இவன் சிறந்த வடமொழிப் புலவன்.

இராச சிம்மன் (கி.பி.635-720). இவன் பரமேச்வரன் மகன் தந்தையைவிடச் சிறந்த சிவபக்தன் உலகப் புகழ்பெற்ற காஞ்சி-கயிலாசநாதர் கோவிலைக் கட்டிப் புகழ்பெற்றவன் திருநின்றவூரில் மனக்கோவில் கட்டிய பூசலார் காலத்தவன். சிவ சூடாமணி, சங்கரபக்தன். ரிஷபாலஞ்சனன். என்ற தொடர்களால் இவனது சைவப்பற்றை விளக்கமாக அறியலாம். இவன் 'ஆகமப் பிரியன் என்று கல்வெட்டுகளிற் கூறப்படலால், சைவ