பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 47

தனித்தனி வணங்கினார் எனின், அந்நாயன்மார்களுடைய உருவச்சிலைகளைக் கண்டு வணங்கினார் என்பதுதானே நுட்பமாகக் கொள்ளத்தக்க பொருளாகும்? ஆகவே, ஆரூர்க் கோவிலில், சுந்தரர் காலத்தில், ஏறத்தாழ நாயன்மார் ஐம்பதின்மர் உருவச்சிலைகளேனும் எழுந்தருளப் பெற்றிருந்தன என்று நினைத்தல் பொருத்தமாகும் அல்லவா?

பிற்பட்ட பல்லவர். கழற்சிங்கன் மகனான நிருபதுங்க வர்மன் காலத்தில் சைவ சமயம் மேலும் வளர்ச்சி பெற்றது. பாடல் பெற்ற கோவில்களுக்குப் பலர் நிபந்தங்கள் விட்டனர். நிருபதுங்கன் மனைவியான வீரமகாதேவி திருக்கோடிகாவில் ஹிரண்யகர்ப்பமும், துலாபாரமும் புகுந்தனள். நிருபதுங்கன் மகனான அபராசி தவர்மன் சிறந்த சிவபக்தன். அவன் காலத்தில் திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் கட்டப்பட்டது. அவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு முதலிய இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. அவன் மனைவியான மாதேவி அடிகள் சிறந்த சைவப்பற்று உடையவள். பின்வந்த கம்பவர்மன் காலத்துக் கல்வெட்டால் திருவொற்றியூர்க் கோவிலை அடுத்து மடம் இருந்தது தெரிகிறது.

தளிப் பரிவாரம்: பல்லவர் காலத்துக் கோவில்கள் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தன. பெரிய கோவில் நடைமுறைகளைக் கவனித்து ஆட்சிபுரிய அமிர்த கணத்தார், தளி ஆள்வார் என்போர் இருந்தனர். மடங்களைக் கவனிக்க மடத்துப் பெருமக்கள் என்பவர் இருந்தனர். பூசை செய்பவரும், வாத்தியங்கள் வாசிப்பவரும், ஆடுமகளிரும், பாடுமகளிரும், ஓதுவார்களும், கோவில்களைத் தூய்மைசெய்பவரும், தவசிகளும் (சமையல் செய்பவர்), வேறு பல பணி செய்பவரும் , எனப் பலவகையினர் இருந்தனர். தேவரடியார் 'அடிகள்மார்