பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சேக்கிழார்

இங்ஙனம் நாயன்மார் காலத்தில் வளர்ந்து வந்த சைவ சமயம்.பல்லவர்க்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் (சேக்கிழார் காலம்வரை) எங்ஙனம் தளர்ச்சியடைந்தது நாயன்மார் வரலாறுகள் - வழிபாட்டு முறைகள் - விழாக்கள் முதலியன எங்ஙனம் பலர் அறியச் சிறப்புப் பெற்றன. இவை அனைத்தும் எங்ஙனம் பெரியபுராணம் : பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணைபுரிந்தன என்பதை அடுத்த பகுதியிற் காண்போம்.

5. சோழர் காலத்துச் சைவ சமய நிலை
(கி.பி. 900-1133)

முன்னுரை: பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தின ஆதித்த சோழன் காலம் முதல் சேக்கிழார் காலத்து அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம் வரை - சைவ சமய நிலையை ஆராய்வதே இப்பகுதியின் நோக்கம். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகள், அவர்கள் பாடிய திருப்பதிகங்கள் முதலியன நன்றாகப் பரவி வளர்ந்த காலம் இச்சோழர் காலமே ஆகும். பல்லவ அரசருள் சைவர் பலர்,வைணவர் பலர்;பெளத்தர் சிலர்:சமணர் மிகச் சிலர். பாண்டிய மனனருட் சைவர் பலர்,வைணவர் சிலர்;சமணர் மிகச் சிலர். ஆயின், சோழர் அனைவரும் சைவரே. 'மத மாற்றம்'என்பது சோழ வரலாற்றிற் காண்டல் அரிது. பல்லவர்க்கு அடங்கிய் சிற்றரசராக இருந்தபொழுதும் சோழர் தம்மால் இயன்ற சிவத் தொண்டைச்செய்து தாம் வந்தனர். அவர்கள் பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தினவுடன். நாடெங்கும் சைவ சமய வளர்ச்சிக்கு முழுக் கவனத்துடன் பாடுபட்டனர். அவர்கள் காலத்தில் உண்டான புதிய கோவில்கள் பல பாடல் பெற்ற பழைய கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. கோவில்கட்கு