பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54. சேக்கிழார்

தறுவாயில் உடம்பு முழுவதும் நீற்றைப்பூசிச் சிவமந்திரங்களைச் சொல்லிக்கொண்டே தங்கள் மார்பில் உள்ள லிங்கத்தைப் பூசிப்பவர். இவர்களை உண்பித்த கோவில்கள் பலவாகும்.

2. காலாமுகச் சைவருள் கடுமையான நோன்பினர் "மாவீரதியர்' எனப்பட்டனர். இவர்கள் மண்டை ஒட்டில் உண்பவர் பிணச் சாம்பலை உடலில் பூசிக் கொள்பவர். அப்பிணச் சாம்பலை உண்பர் தண்டு ஏந்தி இருப்பர்: மதுப்பாத்திரம் கையில் வைத்திருப்பர் அம்மதுவில் கடவுள் இருப்பதாக எண்ணி வழிபடுவர் நரபலி இடுவர். இம்மாவிரதியர் ஆட்சியில் சில கோவில்களும் மடங்களும் இருந்தன. -

3. மாகேச்வரர் லிங்கதாரணம் உடையவர்; சிறந்த பக்திமான்கள்:ஒழுக்கம் உடையவர்;துறவிகள். பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் இருந்தன.

4. அடியார் என்பவர் சிவனுக்குத் தொண்டு பூண்ட பக்திமான்கள்.

5. வேதியர் என்பவர் வேதங்களில் வல்ல பிராமணர். . 6. ஆண்டார் என்பவர் திருமுறை ஒதுபவர் திருநந்த வனம் அமைப்பவர்:மலர் பறிப்பவர்;அடியார்க்கு அடியவர்;கோவிலிலும் திருவீதியிலும் பணி செய்பவர்;மடங்களில் குற்றமற்ற முறையில் வாழ்பவர். இவர்கள் அனைவரையும் உண்பித்த மடங்களும் திருக் கோவில்களும் பலவாகு. நாயன்மார் உருவச்சிலைகள். நாயன்மார் உருவச் சிலைகளைக கோவில்களில் வைத்து வழிபடல் அப்பர், சம்பந்தர்க்கு முன்பிருந்தே வந்த வழக்கமாதல் வேண்டும் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இவ்வாறு கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகளை எடுப்பித்தல் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது.