பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார். 59

சிவனடியார் சிற்பங்கள்.சோழர்கள் கற்றளிகளாக மாற்றிய பாடல்பெற்ற கோவில்கள் சிலவற்றிலும் நாயன்மார் வரலாற்றுச் சிற்பங்கள் காண்கின்றன. அவற்றுள் குறிக்கத் தக்கவை -(1) சிதம்பரத்திற்கு அடுத்த மேலக் கடம்பூர்க் கோவிற் சிற்பங்கள், (2) கீழ்க் கடம்பூர்ச் சிற்பங்கள். (3) கங்கைகொண்ட சோழிச் சரத்துச் சிற்பங்கள் ஆகும்.

1. மேலக் கடம்பூர்க் கோவில் பல்லவர் காலத்தது. அதன் கருவறையின் புறச்சுவர்கள் மூன்றில் இரண்டு வரிசைகளில் நாயன்மார் அறுபத்து மூவர் வரலாற்று நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், காரைக்கால் அம்மையார் தலைகீழே நடந்து செல்வதுபோன்ற காட்சி ஒன்று. நாயன்மார் சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறிக்கும் இச்சிற்பங்கள் பல்லவர் காலத்தனவாகலாம். அல்லது இராசராசன் காலத்தன (திருத்தொண்டர் திருவந்ததாதி உண்டான காலத்தன) வாகவோ, சிறிது பிற்பட்டன வாகவோ இருக்கலாம். உண்மை எதுவாயினும், இவை சேக்கிழார்க்கு முற்பட்டவை என்பதில் ஐயமில்லை.

2. கீழ்க் கடம்பூர்க் கோவில் இன்று இடிந்து சிதைந்து கிடக்கிறது. அதன் கருவறைப் புறச்சுவர்கள் மூன்று மட்டும் நின்றவண்ணம் இருக்கின்றன. அவற்றில் பெரியனவும் சிறியனவுமான புரைகள் காண்கின்றன. பெரிய புரைகளில் சிவனுடைய பலவகை உருவச் சிலைகளும் சிறிய புரைகளில் நாயன்மார் உருவச் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. புரைகட்கு அடியில் அம்மூர்த்தங்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று தெளிவாகக் காணத்தக்க நிலையில் இருக்கும் நாயன்மார் பெயர்கள்உல்காண்ட மூர்த்தி ' (மூர்த்தி நாயனார்), முருகாண்டார்

2 'மும்மையால் உலகாண்ட மூர்த்தி' என்பது திருத்தொண்டத்தொகை,