பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66

சேக்கிழார்

திருப்பணிகள் என்பன குறிக்கப்பட்டிருக்கலாம். சமயப் பணிகளில், அவன் நம்பியைக் கொண்டு திருமுறைகள் வகுத்தமையும் அவன் பெரிய கோவிலில் எடுப்பித்த நாயன்மார் உருவச்சிலைகள் பற்றிய குறிப்புகளும் தக்க அளவு இடம் பெற்றிருக்கலாம்.

2. இராசராசேச்வர நாடகம்: இந் நூலில் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட விவரம், அதனில்நாயன்மார் உருவச் சிலைகள். எடுக்கப்பட்ட விவரம் முதலியன இடம்பெற்றிருக்கும் என்பது அறிஞர் கருத்து. அஃது உண்மையாயின், அந்நூலிற் கண்ட நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள் சேக்கிழார்க்கு ஓரளவு பயன்பட்டன. எனனலாம.

3. கன்னிவனம் என்பது திருப்பாதிரிப்புலியூர் ஆகும். அதுபற்றிய புராணம், நாடகம் என்ற இரண்டும் அவ்வூரினரான புலவர் ஒருவராற் செய்யப்பட்டவை. இவை முதற் குலோத்துங்கன் காலத்தில் இயன்றவை. திருப்பாதிரிப்புலியூரைப் பற்றிய வரலாறு யாதாக இருத்தல் கூடும்? நாம் அறிந்த அளவில், அவ்வூரில் புகழ்பெற்ற சமணப் பள்ளியும் பாழிகளும் இருந்தன: பெயர்பெற்ற சமண முனிவர் பலர் அங்கு இருந்துசமய நூல்கள் பலவற்றைச் செய்தனர், மொழிபெயர்த்தனர். சமண மடத்திற்குப் பல்லவ வேந்தர் ஆதரவு காட்டினர். அங்குத்தான் அப்பர் சமணராகித் தருமசேனர் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகள் சமணத் தொண்டு செய்து வந்தார். பிறகு அவர்க்குச் சூலைநோய் காணச் சமணரோடு மாறுபட்டுத் திருவதிகை சென்று சைவரானார் சமண அரசனான பல்லவனால் பல இடர்பாடுகளை அடைந்தார்; முடிவில், கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரம் கரையேறினார்;