பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

83

உடுப்பூரிலிருந்து காளத்திவரை. கண்ணப்பரது வரலாற்றைக் கூறிய முன்னூல் ஆசிரியர்கள் கூறாது விட்ட உடுப்பூர் வருணனை,வேடச்சேரி வருணனை, உடுப்பூர்க்கும் காளத்திக்கும் இடைப்பட்ட நில அமைப்பு, மலைத்தொடர் வருணனை முதலிய விவரங்கள் இன்றளவும் ஒத்திருத்தல் வியப்பினை ஊட்டுவதாகும். அவ்விடங்களை நேரிற்சென்று கண்டு, சைவத் திருவாளர் இராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் கடப்பை, சித்துர் மாவட்டங்களின் விளக்க (District Manuals & Gazetteers) காணப்படும் விவரங்களும் சேக்கிழார் கூற்றோடு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது.

அப்பரது தொண்டைநாட்டு யாத்திரை. அப்பர் தொண்டை நாட்டு யாத்திரை செய்யும்பொழுது திருவாலங்காடு பணிந்தார். பிறகு பல பதிகளையும் நெடுங்கிரிகளையும் படர்வனங்களையும் கடந்து, காரிக்கரை அடைந்தார்: அங்கிருந்து காளத்தி சென்றார் என்பது சேக்கிழார் கூற்று. காரிக்கரை என்பது இக்காலத்தில் இராமகிரி என வழங்குகிறது. அங்கு இராமகிரி என்ற மலையும் அதன் அடிவாரத்தில் சிறிய சிவன் கோவிலும் உண்டு. அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் அவ்விடத்திற்குக் காரிக்கரை என்பது பழைய பெயர் என்பது தெரிகிறது. திருவாலங்காட்டிற்கும் காரிக்கரைக்கும். இடையில் மலைகளும் காடுகுளும், இவற்றை அடுத்துப் பல ஊர்களும் இருத்தலை இன்றும் காணலாம் சென்னையிலிருந்து நகரி-நாகலாபுரம் செல்லும் பேருந்தில் பிரயாணம் செய்பவர் காரிக் கரையில் இறங்கலாம்: வழிநெடுகவுள்ள குறிஞ்சி நிலக் காட்சிகளைக் கண்டு. செல்லலாம். அங்ங்னமே காளத்திவரை பேருந்தில்