பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சேக்கிழார்

இருக்கின்றன. நந்தனார் திருப்பணி செய்த திருப்புன்கூருக்குப் பக்கத்திலேயே ஆதனூர் ஒன்று உண்டு. தமது நூலைப் படிப்பவர் இடமறியாது மயங்குவர் என்ற நோக்கத்துடன் சேக்கிழார்,

“கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்தில் உள்ளது ஆதனூர். அது கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கின்ற்து. அது மேல்-கானாடு என்ற பெரும் பிரிவைச் சேர்ந்த பகுதியாகும்.”

என்று மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் நேரே சென்று கண்டிராவிடில், இவ்வளவு தெளிவாக இடங் குறித்தல் இயலுமா?

மிழலை:பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் 'பெருமிழலை என்ற ஊரினர். தமிழ் நாட்டில் இப்பெயர் கொண்ட பதிகள் சில உண்டு. சிறப்பாகச் சுந்தரர் தமது தேவாரத்துள்'மிழலை நாட்டு மிழலை என்றும், 'வெண்ணி நாட்டு மிழலை என்றும் இரு வேறு நாடுகளில் இரு வேறு மிழலைகள் இருத்தலைச் சுட்டியுள்ளார். இவை அனைத்தையும் கவனித்த சேக்கிழார். குறும்பரது பதி 'மிழலை நாட்டில் உள்ள பெருமிழலை' என்று தெளிவாகக் குறித்துச் சென்றனர். மிழலை நாடு என்பது கும்பகேர்ணத்தை அடுத்த நிலப்பகுதி.அங்கு மிழலை என்ற பெயருடன் அழிந்த நிலையில் ஒர் ஊர் இருக்கின்றது. அங்கு அழிந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதன் ஒர் அறையில் வைக்கப்பட்டுள்ள உருவச் சிலைகளில் குறும்ப நாய்னாரது சிலையும் காணப்படுகிறது. இங்ங்னம் குழப்பத்திற்கு இடமாகவுள்ள பதிகளைச் சேக்கிழார் மிகவும் த்ெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அவர் தமது யாத்திரையிற் கொண்ட பேருழைப்பை நாம் நன்கறியக்கூடுமன்றோ?