பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 சேக்கிழார்

துறைமுகப் பட்டினங்கள், கொற்கை முத்துக்குப் பெயர் பெற்ற பண்டைத் துறைமுக நகரம், இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தவர் பாண்டியர் என்பவர்.

நடு நாடு. சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி ‘நடு நாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டில் பல சிற்றரசர் இருந்து, திருக்கோவலூர், திருநாவலூர் முதலிய ஊர்களைச் சூழவுள்ள நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். அந்நாடுகள் திருமுனைப்பாடி நாடு, மலையமானாடு எனப் பெயர்கள் பெற்றிருந்தன.

தொண்டை நாடு. இது செங்கற்பட்டு, வடஆர்க்காடு, சித்தூர் முதலிய மாவட்டங்களையும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன் அகத்தே கொண்டது. இதில் சிறப்புற்று விளங்கிய தலைநகரம் காஞ்சிபுரம் என்பது. இதன் சிறந்த துறைமுகப்பட்டினம் மல்லை (மகாபலிபுரம்) என்பது. இந்நாட்டிற் சிறப்புடைய பெரிய ஆறு பாலாறு என்பது இந்நாட்டில் மலைகள் மிகுதியாக உண்டு. வேங்கடம், காளத்தி, நகரி, நாகலாபுரம், இராமகிரி, வேலூர், செங்கற்பட்டு, சோழ சிங்கபுரம் முதலிய பல. இடங்களிலும் மலைத் தொடர்கள், தனி மலைகள் சூன்றுகள் இவற்றைக் காணலாம். இந்நாட்டின் பல பகுதிகளில் பெருங்காடுகளும் சிறிய காடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கு ஒன்றும் விளையாத பாலை நிலங்கள் காண்கின்றன. இவற்றுக்கு இடையே கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்க கூறின், தொண்டை நாட்டில் நானிலத்து ஐந்திணை. வளங்களையும் கண்டு களிக்கலாம்.

பெயர்க் காணங்கள்: 1.” தொண்டை நாடு முதலில் ‘குறும்பர் நிலம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. குறும்பர்