பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சேக்கிழார்

கஞ்சாறுார். இவ்வூரைப்பற்றிச் சுந்தரரும் நம்பியும் ஒன்றுமே குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் இவ்வூரின் பெயர், வளம் இவைபற்றி ஆறு பாக்களைப் பாடியுள்ளார். “வயற் கரும்பின் கமழ் சாறு கஞ்சாறுர்” என்பது சேக்கிழர்ர் வாக்கு இப்பதி சிகாழியை அடுத்துள்ள ஆனந்த தாண்டவபுரம் என்பது. மானக்கஞ்சாறர் வரலாற்றில் கூறப்பட்ட பஞ்சவடி ஈசர், மாவிரதியார். மானக்கஞ்சாறர், அவர் திருமகளார். இவர்களுடைய உருவச்சிலைகள் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மேற்கில் கரும்புப் பயிர் செழித்து வளர்கிறது. இக்கரும்பு வளத்தாற்றான் சேக்கிழார், மேற்சொன்ன தொடரைக் குறித்தார் போலும்!

செங்குன்றுார்: விறல்மிண்ட நாயனார் வாழ்ந்த பதி 'செங்குன்றம்' என்பது நம்பி கூற்று அவ்வளவே. அது சேரநாட்டுச் செங்குன்றுாரா? கொங்கு நாட்டுச் செங்குன்றுாரா (திருச்செங்கோடா)? என்று அந்தாதி படிப்போர்க்கு ஐயமுண்ட்ாதல் கூடும். சேக்கிழார், இவ்வையத்தை அறவே அகற்ற விரும்பி சேரநாட்டில் உள்ள பதிகளில் முன் வைத்து எண்ணத்தக்கது. விறல்மிண்டர் பிறந்த செங்குன்றூர் என்று தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். .

இவ்வாறு மயங்கத்தக்க இடங்களை எல்லாம் தெளிவர்கக் கூறிச்சென்ற சேக்கிழார். சிவத்தல அறிவும் தமிழ்நாட்டு அறிவும் நிரம்பப் பெற்றவர். அங்ங்ணம் நிரம்பிய அறிவைப் பெற்றமைக்கு அவர் செய்த தல யாத்திரையே காரணம் என்பன இதுகாறும் கூறிய பல சான்றுகளைக் கொண்டு நன்கு உணரலாம்.