பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 எஸ். எம். கமால் "சமுகம் உத்தரவு... ... அவசரம் ஒன்றுமில்லை. சில செய்திகள்" என்ற பீடிகையுடன் பிரதானி தொடர்ந்தார். "இராமேசுவரம் திருப்பணி நிறைவு விழாவில் திருமலை நாயககர கலந்து கொள்ள இயலாதாம் பயணம் மேற்கொள்ளும் வகையில் அவரது உடல் நலம் இல்லையாம். ராஜநர்த்தகி கலாதேவியை இராமநாதபுரம் சமஸ்தானம் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று தெரிவித்து இருக்கிறார். மற்றும் ..." என்று பிரதானி தொடர்வதற்குள், "மதுரை மன்னரது ஒப்புதல் எதிர்பார்த்ததுதான. ஆனால் அவரது உடல் நலிவு பற்றி அறிய மனத்திற்கு வேதனையாக இருக்கிறது.... கோயில் விழா முடிந்ததும் அவசியம் மதுரை சென்று அவரைப் பார்த்து வர வேண்டும் . . . . வேறு செய்திகள்...." பிரதானி சொன்னார், "மகர் நோன்பு விழாவின் பொழுது கண்டெடுக்கப்பட்ட கட்டாரியின் சொந்தக்காரர் பற்றிய உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. விழாவின் பொழுது வீண் குழப்பம் செய்த அந்த ஆளைத் துரத்திச் சென்ற நமது வேகர்களில் ஒருவர் அவனை ஏற்கனவே உப்பூர் சத்திரத்தில் பார்த்த ஞாபகம் இருப்பதாகத் தெருவித்துள்ளார். ஆதலால் அந்த ஆள் ராஜசிங்கமங்கலம் அல்லது அஞ்சுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற ஊகத்தில் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளன...." II -- == „тт = =_ يFiت H___ = = எனன நடவடிக்கை அது' மன்னர் கேட்டார். "அந்த சிமை நாட்டுத் தலைவர்களுக்கு அலைகள் அனுப்பி இருக்கிறேன். அந்தப் பகுதிகளில் நமது அரசுக்கு எதிராக