பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 89 கருத்துத் தெருவிப்பவர்கள். அல்லது பொது இட ங்களில் அரசு நடவடிக்கைகளுக்கு விரோதமாக விமர்சிப்பவர்களைக் கண்காணித்து விரைவில் தகவல்கள் அனுப்புமாறு எழுதி இருக்கிறேன்." "நல்லது. அவர்களது தகவல்களுக்கு காத்து இராமல் அவர்களை நாம் அழைத்துப் பேசினால் என்ன? அவர்கள் எத்தனை பேர்" மன்னர் கேட்டார். சில விநாடிகள் யோசித்த பிரதானி சொன்னார், "சமுகத்திற்கு அவர்கள் மொத்தம் பத்து நாடாள்வார்கள்.... அஞ்சுக்கோட்டை, அனுமந்தன்குடி, தாழையூர், இடையளநாடு, அறுநூத்தி மங்கலம், ராஜசிங்க மங்கலம், தென்னாலை நாடு, காளையார் கோவில், நாலுக்கோட்டை, அதளையூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்." "அவர்களை வருகின்ற பவுர்ணமியன்று சேதுக்கரைச் சத்திரத்திற்கு வந்து சந்துக்குமாறு உடனே இலை அனுப் புங்கள்." "சமகம் உத்தரவு" அடுத்து மன்னர் குமாரத் தேவனை அழைத்தார். குமாரத் தேவன் வெற்றிலைத் தட்டுடன் வந்து வணங்கிவிட்டு, தட்டை மன்னர் முன் பணிவுடன் வைத்தான். வேறு உத்தரவு எதுவும் மன்னரிடமிருந்து இல்லாததால் பிரதானி மன்னரை வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றார். மன்னர் வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலைச் சுருள் ஒன்றை எடுத்து வாயில் வைத்து மென்று சுவைத்துக் கொண்டு இருந்தார். அவர் விரைவில் உறங்கிவிடுவார் என்பது அவனுக்குத் தெரியும். மன்னர் உறங்குவதற்கு ஏதுவாக படுக்கை விரிப்புகளைச் சரி செய்ய படுக்கை அறைக்குள் சென்றான் குமாரத் தேவன். வைகரையில் இராமநாதபுரத்திற்கு திரும்ப வேண்டுமல்லவா?

  • * *