பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 91 ஒன்று காற்றின் அசைவிற்கு தக்கவாறு வெளிச்சத்தைக் கூட்டியும் குறைத்தும் உமிழ்ந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை வாசலiல கடநத கயறறுக் கட்டிலில் அமர்ந்து சுருட்டை வாயில் வைத்து புகையை உறிஞ்சிக் கொண்டிருந்த ஒருவரது உருவமும் அந்த மங்கிய விளக்கு வெளிச்சத்தில் காணக் கூடியதாக இருந்தது. கடற்காற்றில் தோப்பில் நின்ற தென்னை மரங்களின் மட்டைகள் காற்றில் உராய்ந்து அசையும் ஒலியைத் தவிர, வேறு எந்த இசையும் இல்லாமல் அந்தப் பகுதி ஏதோ ஒரு ஆண்யப் பகுதி போல அமைதியாக இருந்தது. சிறிது நேரத்தில் புதிய ஓசை ஒன்று மெதுவாகக் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்பதை கவனித்த அந்த மனிதர் வாயில் இருந்த கருட்டை எடுத்து தரையல் உரசி அனைத்தார். காலடி இசை வரும் திக்கைக் கூர்ந்து கவனித்தார். இப்பொழுது அ ந்து காலடி ஓசை மட்டுமல்ல ஒரு ஆள் அந்தக் குடிசையை நோக்கி மெதுவாக இருளை ஊடுருவி வருவதையும் உணர்ந்தார். சில நொடிகள் கழிந்தன. "வந்தியத் தேவா என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" இருளை ஊடுருவி கம்பீரமாக ஒலித்தது அந்தக்குரல். "மகாபிரபு உங்களை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்." தோப்புக்காவலரின் கணிவான பதில்-கட்டிலில் இருந்து எழுந்து நின்றவாறு,