பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 93 "சபாஷ்" என்று சொல்லிய பெரியவர் கட்டிலைவிட்டு எழுந்து "வந்திய தேவா, நாங்கள் அந்தக் கேணிப்பக்கம் சென்று வருகிறோம். உஷாராக இரு உறங்கிவிடாதே ஏதாவது தகவல் வந்தால் சீட்டி அடித்து தெரிவிக்கவும், நாங்கள் வந்துவிடுகிறோம்." என்று சொல்லி முடித்தார். "உத்தரவு" பெரியவரும் வீரபாண்டியனும் அந்தக் குடிசைக்குப் பின்னால் கூப்பிடு தொலைவில் இருந்த கேணிக்குச் சென்று அதன் மேடையில் அமர்ந்தனர். "உம். இப்பொழுது சொல்." பெரியவர் வீரபாண்டி யனை வினவினார். "நமது எதிரி சேதுக்கரைச் சத்திரத்திற்கு வருவதாக இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தகவல். வடக்குப் பகுதி நாட்டுத் தலைவர்களை அங்கு சந்திக்கப் போவதாக காரணம் தெரியவில்லை." "உம் அப்புறம்" "பத்து நாட்களில் பவுர்ணமி வருகிறது. மங்கிய ஒளியில் அங்கு நமது திட்டத்தை நிறைவேற்றிவிட்டு கடல் வழியாகத் தப்பி வந்துவிடலாம்." வீரபாண்டியனின் இந்தத் திட்டத்தைக் கேட்ட பெருயவர் சிறிது நேரம் மெளனமாக யோசனை செய்தார். பிறகு அவர் சொன்னார்.