பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எஸ். எம். கமால் "அந்தக் கூட்டம் இரவில் நடந்தால் நமது திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும். பகலில் நடந்தால் என்ன செய்வது. திட்டத்தை முடித்து கடற்கரைக்கு வந்து, அப்பொழுது சோழகன் காற்று அடிக்காவிட்டால் பாயைத் துரக்கி படகை நகர்த்த முடியாமல் போய்விடும். அதிலிருந்து தப்பி لتع مدن م) مدى சிரமம். அப்புறம் இரண்டும் கெட்டான் ஆகிவிடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளலாம். "நல்லது பிரபு. மீண்டும் இராமநாதபுரம் கோட்டையுடன் தொடர்பு கொள்கிறேன்." | # s == -- சரி. புறப்படுவோம். வரும் அமாவாசையன்று சந்திப்போம். இங்கு அல்ல." "வேறு எங்கே?" "கடுகு சந்தை சத்திரத்தில், தேசாந்திரி போல மஞ்சள் உடையில் வர வேண்டும். எனது வலது மணிக்கட்டில் சிவப்பு மணிக் கயிறு கட்டி இருப்பேன். அவ்விதமே ரீயும் கட்டிக் கொண்டு வர வேண்டும் மற்றவைகளை அப்பொழுது அங்கு பேசிக்கொள்வோம். இப்பொழுது நான் புறப்படுகிறேன். ஒரு நா ழிகை நேரம் கழித்து நீ புறப்படு" என்று சொல்லியவாறு பெரியவர் அங்கிருந்து நகர்ந்தார் வீரபாண்டியனும் உடன் சென்றான். குடிசைப் பக்கம் வந்த பொழுது வந்தியத் தேவன் அரை இறை உறக்கத்தில் இருந்தான். அவனது கையில் சில நாணயங்களை வைத்து திணித்துவிட்டு, அவர் அங்கிருந்து அகன்றனர். அவருடன் செல்வது போல வந்தியத் தேவனுக்கு போக்கு காட்டிவிட்டு தோப்பின் இன்னொரு பக்கத்திற்கு சென்று அங்கு காத்து இருந்தான் வீரபாண்டியன்.