பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 95 சிறிது நேரத்தில் ←PᏬ5 தீனக்குரல் கேட்டது. அது வந்தியத் தேவனுடையதுதான். "என்னை அடிக்காதீர்கள். என்னை அடிக்காதீர்கள்." தேடிசைப் பக்கம் வீரபாண்டியன் உன்னிப்பாக்க கவனித்தான். ஏழெட்டு வீரர்கள் வந்தியத் தேவனைச் சூழ்ந்துகொண்டு அவனை உதைத்தார்கள். அவர்கள் சேதுபதி மன்னரது வீரர்கள். அந்தக் காட்சியைக் காண்பதற்கு சிரமமாக இருந்தது. ஒருநிமிடம் யோசித்தான். ஒடிச் சென்று அந்த வீரர்களுடன் பொருதி வந்தியத் தேவனைக் காப்பாற்ற முயற்சிக்கலாமா என்று, ஆனால் அது அவனுக்கு பாதகமாக அமைந்து விடுவதுடன், தமது திட்டங்களுக்கு அவனைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுமே என்ற நினைவும் வந்தது. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மெளன. காட்சியாக அந்தக் காட்சியைக் கவனித்தான். "இரண்டு ஆட்கள் இங்கே வந்தார்களே! எங்கே அவர்கள்? அவர்கள் இலங்கை நாட்டுக் காரர்கள்தானே சொல்." அந்த வீரர்கள் கேட்டனர். "இல்லை ஐயா, இங்கே நான் மட்டும்தானே இருக்கிறேன்." "நம்ப மாட்டோம். ஒரு நாழிகைக்கு முன்னர்தான் இருவர் கடற்கரையில் இருந்து ஒருவர் பின் ஒருவராக இந்த தோப்பிற்குள் நுழைந்தனர். எங்களது கண்களால் கண்டோம்." "என்னை அடிக்காதீர்கள். பதினைந்து ஆண்டுகளாக இங்கே காவலில் இருக்கிறேன். யாருடனும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. எனது முதலாலி தொண் டியில் இருக்கிறார். என்னைப் பற்றி அவரிடம் விசாரித்துப் பாருங்கள்."