பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 எஸ். எம். கமால் வந்தியத் தேவன் இவ்விதம் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, இரண்டு வீரர்கள் தங்கள் கைகளில் பிடித்து இருந்த தீ வெட்டி களுந்தை குடிசையில் உள்ள விளக்கில் பற்ற வைத்து, எடுத்துப் போய் குடிசைக்குள்ளும் குடிசைக்குப் பின்னும் சோதனை செய்தனர். சந்தேகப்பட்ட ஆட்களோ அல்லது பொருட்களோ அங்கு இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின்னர், "பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான். இன்னொருநாள் வருவோம். அப்ப்ொழுது = is a mi m " என்று சொல்லியவாறு அவர்கள் கடற்கரைப் பக்கம் சென்றனர். அவர்கள் சென்றவுடன் வீரபாண்டியன் மெதுவாக குடிசைப்பக்கம் நகர்ந்தான். குடிசை அருகே கட்டிலில் அமர்ந்த வந்தியத் தேவன் அடிப்பட்ட இடங்களை தடவியவாறு இருந்தான். "வந்தியத் தேவா" வீரபாண்டியனது குரல் "தம்பி வீரபாண்டியனா' இங்குதான் இருந்தீர்களா? நடந்ததைக் கண்டீர்கள் அல்லவா?" "ஆமாம். முதலில் தலையிட நினைத்தேன். பிறகு காரியம் கெட்டுவிடுமே என்று பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தேன்." "நீங்கள் செய்தது நல்லது. நீங்கள் தலையிட்டு இருந்தால் தொடர்ந்து எனக்கு தொந்தரவுதான் ஏற்படும்." "சரி விவரங்களைப் பெரியவரிடம் சொல்கிறேன். நீ தைரியமாக இரு!" என்று சொல்லிவிட்டு வீரபாண்டியன் அங்கிருந்து புறப்பட்டான். அவனது கனவுகள் "விரைவில் பெரியவரின் உதவியால், அந்தக் கடற்கரையில் ஒரு தோப்பின் முதலாளி ஆகிவிடலாம்" அது அவனது இலட்சியக் கனவு. அந்தக் கனவில் லயித்த வீரபாண்டியன் அப்படியே உறங்கிவிட்டான். o o * 능