பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 GTCTV). GRILI). «ЕРЫШ, ПGN) இருந்த பயணிகளில் இருவர் எழுந்து ஒருவர் பின் ஒருவராக வெளியே சென்றனர். சத்திரத்தில் இருந்து வெளியேறிய அந்த இரு பயணிகளைத் தொடர்ந்து மற்றுமொரு ஆளும் வெளியே இருட்டில் புகுந்து சென்றனர். பைராகி உடைகளில் இருந்த முதல் இருவரும், சத்திரத்திற்குத் தெற்கே சாயல்குடி சாலையில் சிறிது தூரம் வரை சென்று. சூர் இடத்தில் நின்றனர். அந்தக் கும்மிருட்டிலும் அங்கு ஓங்கி வளர்ந்து நிற்கும் அரச மரமும் அதன் அருகில் ஒரு சுமைதாங்கி கல்லும் இருப்பதையும் தெரிந்து கொண்டனர். மக்களது நடமாட்டம், அரவம், ஏதாவது தென்படுகிறதா என்பதை அறிய அங்கு ஒரு நாழிகை நேரம் மெளனமாக நின்றனர். அந்த அரச மரத்தின் இலைகளை ஆட்டி அசைக்கும் கா ற்றின் ஒலி மற்றும் சற்று துரத்தில் மரப்பொந்தில் இருந்து கோட்டான் ஒன்று இடைவெளி விட்டு அலறும் அவலக்குரல் - இவைகளைத் தவிர எவ்வித ஒசையும் அவர்களது காதுகளில் படவில்லை. "குருஜி தங்களது பயணத்தில் ஏதேனும் விஷேம் உண்டா?" இருவரில் ஒருவர், இளையவர். அந்தக்காட்டு அமைதியைக் கலைத்து பெரியவரிடம் வினவினார். "உம் சற்று பொறு. யாரோ ஒருவர் நம்மை நோக்கி வருவதை உணரவில்லையா?" "தரையில் கிடக்கும் சருகின் மீது எலி அல்லது பெருச்சாளி ஒடி இருக்க வேண்டும். அதுதான். அந்த இசை இப்பொழுது இல்லையல்லவா?" இளையவரது குரல். அப்பொழுது பொயவர் பதில் கூறவில்லை. சில நொடிகள் நிதானித்தவாறு,