பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 99 "ஒன்றும் விெேஇசிெக்கல் சத்திரத்தில் இருந்த ஒருவனது கண்கள் மட்டும் என்னை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தன...." "சொல்லுங்கள் குருஜி அப்புறம் அவன் என்ன செய்தான்?" மிகுந்த ஆவலுடன் அந்த வினா வெளிவந்தது. "இப்பொழுது வேண்டாம். நாளை பயணத்தின் பொழுது விபரம் சொல்கிறேன்.... அதுசரி. நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி பயணத்திற்கு ஆயத்தமாக வந்து இருக்கிறாய் அல்லவா?" "இரண்டு ஆண்டுகளாகத் தங்களது உத்தரவை குறை இல்லாமல் நிறைவேற்றி வந்திருக்கிறேன். பயணத்திற்கு ஆயத்தமாகவே வந்துள்ளேன்." "சரி. நமது பாட்டனாரின் வீரசபதம் நிறைவேறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. நாளை கோழி கூவும் வேளையில் நாம் புறப்பட வேண்டும். அயர்ந்துவிடக்கூடாது. இப்பொழுது நாம் சத்திரத்திற்குச் செல்வோம்." இருட்டில் யாருக்கும் அடையாளம் தெரியாமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தனர். பிற பயணிகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்ததால் எவ்வித ஒசையும் இல்லாமல் மெதுவாகச் சென்று அவர்களது விரிப்புகளில் படுத்துக் கொண்டனர். அதிகாலையில் விழித்து எழுந்த பைராகி ஒருவர் உணர்ச்சியுடன் பாடும் பஜனை பாட்டுக்கேட்டு இருவரும் விழித்து எழுந்தனர். கை, கால், முகம் கழுவி சுத்தம் செய்த பிறகு தங்களது முடிச்சுகளுடன் புறப்பட்டனர். அப்பொழுது சத்திரத்து முகப்பில் நின்ற விசாரணைதாரரிடம் ஒருவன் எதனையோ சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றான்.