பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - எஸ். எம். கமால் அவனது நடவடிக்கைகள் உணர்த்தின. ஒருவகையாக உச்சி வேளைக்கு சற்று முன்னதாகவே அவன் எதிர்பார்த்த பிரமுகர் நாலைந்து குதிரை வீரர்களுடன் சிக்கல் சத்திரத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வேறு யாருமில்லை. சிக்கல் பகுதிக்கு பொறுப்பான சேர்வைக்காரர். சேதுபதி மன்னரது அலுவலர். மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சேவகரைப் பார்த்து, "என்ன ஆறுமுகம் சேர்வை ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறீரா?" என்று வினவியவாறு குதிரையில் இருந்து இறங்கினார். - "ஆமாம் ஐயா! மிகவும் முக்கியமான சங்கதி. தங்களிடம் சொல்வதற்காகத்தான் காத்து இருக்கிறேன்." "மிக முக்கியமான ஓலை ஒன்றை இராமநாதபுரம் கோட்டை தளபதி அனுப்பி இருந்தார். அதனால் இராமநாதபுரம் கோட்டைக்குச் சென்று இருந்தேன். சரி உள்ளே வா" சேவகரை அழைத்துக்கொண்டு சேர்வைங்ககாரர் சத்திரத்தின் பின்கட்டில் உள்ள அறைக்குச் சென்றார். "இப்பொழுது சொல்லுங்கள்... I. "நேற்றைய தினம் இங்கு வந்த பயணிகளில் ஒருவரது தோற்றமும் நடவடிக்கையும் எனக்கு சிறிது குழப்பத்தை உண்டாக்கின. அதனால் நேற்று அவரைத் தொடர்ந்து போய் கடுகு சந்தைச் சத்திரத்திலும் தங்கி இருந்து அவரை நோட்டமிட்டேன். அங்கிருந்த இன்னொரு வட நாட்டு பைராகி ஒருவரும் அவருடன் சேர்ந்துகொண்டார். அவர்கள் மெளனமாகவே இருந்தனர். நேற்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு இருவரும் சத்திரத்திற்கு வெளியே சென்றனர். நேற்றைய அமாவாசை இருட்டில் நானும் அவர்கள் அறியாத வண்ணம் பின் தொடர்ந்து சென்றேன். அவர்கள் பேகவதைக் கவனித்தேன். -