பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 எஸ். எம். கமால் அன்னசத்திரத்திற்கு அருகிலேயே கோட்டைச் சேர்வைக்காரர் அலுவலக அறையும் அமைந்து இருந்தது. சுமார் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவரை அன்று முற்பகலில் கோட்டைச் சேர்வைக்காரர் விசாரித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலையில் இந்த இளைஞர் மட்டும் ஒரு படகில் வந்து தனியாக பாம்பன் துறைக்குச் சற்று கிழக்கே உள்ள மணல் திட்டுப் பகுதியில், கரை இறங்கியதால், காவல் பணியில் இருந்த பாம்பன் காவலர்கள் அவரை பிடித்து கோட்டைக்குக் கொண்டு வந்தனர். "ஆமாம் நீங்கள் இந்த சேது நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்கிறீர்கள் நீங்கள் எப்பொழுது இலங்கைக்கு சென்றீர்கள். என்ன காரணமாக சென்றீர்கள் என்பதற்கான ஆவணங்களை காட்ட முடியுமா?" "இல்லை" II - - == # = * அப்படியானால் உங்களது வார்த்தைகளை எப்படி நம்புவ കൂ?" "உண்மையைத்தான் சொல்கிறேன். உண்மைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் சொல்ல முடியாதே நான் சொல்வது அனைத்தையும் நம்ப வேண்டும் என்று நான் உங்களை கட்டாயப்படுத்த முடியுமா?" "சரி. இந்தத் தீவில் பாம்பன், புங்கடி, இராமேசுவரம், தனுக்கோடி என்ற துறைமுகங்கள் வழியாக நாள் தோறும் வணிகர்களும், பயணிகளும் இந்த தீவிற்கு வந்து போகிறார்கள். நீங்கள் மட்டும் தனியாக அரசாங்கத்திற்கு தெரியாத வகையில் துறைமுகத்திக்கு அப்பால் கரை இறங்கியதற்கான காரணத்தையாவது சொல்வி ர்களா?"