பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 107 "நான் பயணம் செய்த தோணி யாழ்ப்பானத்தில் உள்ள டச்சுக்காரர்களுக்குச் சொந்தமானது. ஏதோ முக்கியமான சரக்குகளை உடனே தொண்டி துறைமுகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக அந்த தோணி நேற்று மாலையில் புறப்பட்டது. காற்று சரியாக இல்லாததால் இன்று அதிகாலைதான் இங்கு வந்து சேர்ந்தது. நான் புங்கடியில் இறங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். காலை கும்மிருட்டில் நான் இறங்கிய இடம் புங்கடி என்றுதான் நினைத்தேன்." "நீங்கள் இந்தப் பகுதிக்கு ஏற்கனவே வந்து போய் இருக்கிறீர்களா?" "இல்லை. இராமேசுவரத்திற்கு அருகில் உள்ள பேய்க்கரும்பில் எனது உறவினர்கள் இருப்பதாக அறிந்தேன். அவர்களைச் சந்தித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் உத்தேசத்துடன் வந்தேன்." "அந்த உறவினர்கள் யார் சொல்லுங்கள்" "அவர்கள் அந்த ஊரின் பூர்வீக குடிகள் என்று மட்டும்தான் தெரியும்." "சர். உங்கள் பெயர்: ஊர்" "எனது பெயர் தனுக்காத்த இராமுத் தேவர். ஊர் அஞ்சுக்கோட்டை நாட்டு ஓரியூர். இந்த விபரங்கள் போதுமா?" "இல்லை. நீங்கள் யார் என்பதை அறிய போதுமா&தல்ல. அனுமதியின்றி இந்த நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான தண்டனைக்கு ஆளாக வேண்டி இருக்கும்."