பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 எஸ். எம். கமால் "இதற்குமேல் எதுவும் சொல்ல என்னால் முடியாது. இது எனது நாட்டின் ஒரு பகுதி. இங்கே வருவதற்கு யாருடைய அனுமதியும் பெறவேண்டியது இல்லை. அத்துடன் நான் செம்பி நாட்டு மறவன். இந்த நாட்டு மன்னரது கிளையைச் சேர்ந்தவன்." "சேர்வைக்காரனது முகத்தில் சினத்துக்கான அறிகுறி தென்பட்டது. தான் ஒரு அரசு அலுவலர் என்பதை அறிந்து இருந்தும் தனது வினாக்களுக்கு பணிவும் பயமும் இல்லாமல் பதில் அளிக்கும் இந்த இளைஞனை என்ன செய்யலாம் என சேர்வைக்காரரது சிந்தனை சுழன்றது என்றாலும் சில நிமிட மெளனத்திற்குப் பிறகு அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார். "இந்த மனிதன் நமக்குக் கட்டுப்பட மாட்டான் இவனை இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பிவிடுவோம்." குதிரைச் சேவகர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளுடன் கோட்டைச் சேர்வைக்காரர் முன் வந்து நின்றனர். அவர்களில் தலைமைச் சேவகரிடம் ஒலையைக் கையளித்துவிட்டு, "இந்த இலையும் இரியூர்த் தேவரையும் இராமநாதபுரம் கோட்டையில் ஒப்படைத்துத் திரும்புங்கள்." சிரியூர் தேவரைப் பார்த்து சேர்வைக்காரர் சொன்னார். "உங்களது கருத்துப்படி நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கலாம். ஆனால் எனது முடிவுப்படி நீங்கள் தக்க ஆவணம் எதுவும் இல்லாமல் நடு இரவில் இந்தச் சீமைக்குள் அத்துமீறல் புரிந்துள்ள குற்றவாளி சேதுமன்னரது மேலாண்மையையும் மக்களது பாதுகாப்பையும் கண்காணிக்கும் அரசியல் அதிகாரி என்ற முறையில் மேல் விசாரணைக்கும் தீர்ப்பிற்கும் உங்களை இராமநாதபுரத்திற்கு அனுப்புகிறேன். இந்த வீரர்களுடன் பயணம் செய்வதற்கு முன்னர் - == s II உங்களை விலங்கிட வேண்டியது எமது கடமை....