பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 108. சேர்வைக்காரன் சொல்லி முடிப்பதற்குள் தனுக்காத்த இராமுத் தேவர் கேபம் கொப்பளிக்க உரத்த குரலில் ஒலமிட்டார். "யாரைப் பார்த்து குற்றவாளி என்று சொன்னிர்; இந்த மறவர் சீமையின் மானத்தை தன்னாட்சி உரிமையைக் காத்த வீரத் தியாகிகளது வாரிசு நான். தளவாய் சேதுபதி மீது போர் தொடுத்த மதுரை தளபதி இராமப்பையனை, பொருதி மரணகாயமுறச்செய்த சேதுபதியின் மைத்துனர் வன்னியத் தேவனின் வலது கையாக நின்று போரிட்டு வீரசொர்க்கம் புகுந்த ஆளஞ்சாத்தேவரது பேரன் நான். இந்த இராமேகவரத்தின் புனித மண்ணை ஏர்கொண்டு கிளறி உழுவதே பாவம் என்று கருதும் இந்த சேதுவில், பல்லாயிரக்கணக்கான வீரர்களது குருதியை ஆறாக ஒடவிட்ட திருமலைநாயக்கனைப் பழிவாங்கத் துடிக்கும் சுத்த வீரன் நான்.... நான் குற்றவாளியா? என்னை குற்றவாளியாக கைகளை கோதிப்பிணைக்கும் விலங்கினைப் பூட்டிக்கொள்ள அனுமதிக்க == == | மாட்டேன்.... "ராஜவிசுவாசத்தைப் பற்றிபேகம் நீங்கள், ராஜ்யத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்வதும் ராஜவிசுவாசம்தான் என்பதை அறியவில்லை" "அல்ல அந்தச் சட்டம் குற்றம் எதுவும் செய்யாத எதிக்குப் பொருந்தாது. அதனை சேதுபதி மன்னரிடமே தெரிவிப்பதற்கு தயார்." வேறுவழியில்லாமல் கோட்டைச் சேர்வைக்காரர் தனுக்காத்த இராமுத் தேவரை விலங்கு பூட்டாமல், பத்து வீரர்களது பாதுகாப்பில் இராமநாதபுரத்திற்கு அனுப்பிவைத்தார்.