பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 எஸ்.எம். கமால் மாலை நேர வெளிச்சம் சுருங்கிக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் கோட்டைக்கு மேற்கே வானில் அந்தி மேகங்கள் தங்களின் கறுத்த நிழலினால் கதிரவனிடையே ஒளிமாற்றத்தைத் தொடங்கின. அப்பொழுது கோட்டை அகழியைக் கடந்து கோட்டை வாயிலில் நுழைந்தபொழுது கோட்டைக் காவலர்கள் ஆரவாரம் செய்து பேரிகை, தாரை, சங்கு ஆகியவைகளை முழக்கி வரவேற்பு அளித்ததில் இருந்து சேதுபது மன்னரும் அங்கு இருக்க வேண்டுமென்பதை ஊகித்த பாம்பன் அணியினர் கோட்டை மதிலை ஒட்டி ஒதுங்கி நின்றனர். சில நிமிடங்களில் கோட்டைவாயிலுக்கு வந்த கோட்டைச் சேர்வைக் காரன் இந்த அணியினரைக் கவனித்தவுடன் கோட்டைக்குள் வருமாறு சைகை காட்டினர். பாம்பன் அணியினர் கோட்டைக்குள் சென்று பாம்பன் கோட்டை சேர்வைக்காரர் அனுப்பி வைத்த ஒலையை அவரிடம் ஒப்படைந்து அவர்கள் அழைத்துவந்த தனுக்காத்த இராமுத் தேவரைக் குறிப்பிட்டு ஏதோ அவரிடம் சொன்னார். ஒரு சேவகன் மூலம் இந்த ஒலையை சேர்வைக்காரர் சவுக்கையில் இருந்த பிரதானிக்கு அனுப்பி வைத்து அவரது மறுமொழி பெற்று வருமாறு செய்தார். அரை நாழிகை நேரம் கழித்து வந்த சேவகன் தனுக்காத்த தேவரை இரு வீரர்களுடன் சவுக்கைக்கு அழைத்துச் சென்றான். சவுக்கையின் முகப்பில் இருந்த பிரதானி தனுக்காத்த இராமுத் தேவரை சேதுபதி அரசர் முன் அழைத்துச் சென்று நிறுத்தினார். - 1. # . II "மகாராஜா &ToftroToTostofof_T)