பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 எஸ். எம். கமால் வீரபாண்டியன் கூவியழைத்ததை اتری لیگ T புரிந்துகொண்டு அந்த தோப்பு நோக்கி நடந்து வந்தான். சாதாரண மூங்கில் கட்டிலில் அமர்ந்து இருந்த மகாராஜாவிடம் வீர பாண்டியனும் இராமுவும் போய் நின்றார்கள். "என்ன நடந்தது? மூன்று நாட்களாகி விட்டதே. நாங்கள் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம்" "என்ன செய்வது? நான் மூன்று நாட்களுக்கு முன் கரை இறங்கிய இடம் புங்கடி அல்ல. பாம்பனில் உள்ள சேதுபதி வீரர்கள் என்னை பிடித்து இராமாதபுர கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மன்னது டம் நேரடி விசாரணைக்கு நிறுத்திவிட்டனர்..." "அப்புறம் ...." ஆவ ன் கட்டார் பெரியவர். "அப்புறம் என்ன, சேதுபதி மன்னர் என்னை விசாரித்தார்." அப்பொழுது சில வீரர்கள் அந்த தோப்பு நோக்கி வருவதைக் கண்ட வீர பாண்டி பன் அவர்களிடம் அதனைத் தெரிவித்தான். "நிச்சயமாக என்னைத்தான் அவர்கள் தேடி வருகிறார்கள். மற்ற கதையை அப்புறம் சொல்கிறேன். இப்ெ பாழுது எங்கே ஒடி ஒளிவது? நிராயுதபாணிகளான நாம் அவர்களைப் பொருவதில் பயனில்லை" "உடனே வாருங்கள்" சைகைகாட்டிதோப்பின் மேற்கு கடைசியில் உள்ள கிணற்றடி அருகே அடர்த்தியாக வளர்ந்து நிற்கும் மாமரங்களில் ஏறி ஒளிந்துகோள்வோம். வேறுவழியில்லை."