பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 115 மூவரும் வேகமாக சமையல் கொட்டகையில் இருந்த சமையல்காரர்களிடம் சைகையினால் தகவல் தெரிவித்துவிட்டு மே ற்குபுறம் ஓடினார்கள். - குதிரை வீரர்கள் இப்பொழுது அந்தத் தென்னந்தோப்பின் வேலியருகே குதிரைகளை நிறுத்திவிட்டு தோப்பிற்குள் வந்து, யாராவது இருக்கிறார்களா என்று பல பக்கங்களிலும் நோட்டமிட்டனர். சமையல் கொட்டகைக்கு வந்து உற்றுப் பார்த்தனர். அங்கு ஒருவன் சமையலுக்கு அரிசி களைந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, "டேய் இங்கே யார் இருக்கிறார்கள்?" அவன் அவர்களுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களைப் பார்த்து பீதியுடன் விழித்தான். வீரன் ஒருவன் அவனது முதுகில் கற்று வேகமாக ஒரு "சொட்டு" கொடுத்தான். "பே. . . பே. . பே. . ." என பரிதாபமான குரலில் சமையற்காரன்கத்தியபொழுதுதான், அவன் ஊமை மட்டுமல்ல செவிடனும் கூட என்பதை அந்த வீரர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் சைகை மூலம் அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை அறிய முயன்று. முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் அந்த பெரிய தோப்பின் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்தனர். மனித சஞ்சாரம், நடமாட்டம் எதுவும் இல்லை என்பதை எளிதில் புரிந்தனர். பொதுவாக இத்தகைய தோப்புகளில் தேங்காய் வெட்டுக்காலம் வரைதான் காவல்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் குடும்பத்தினர் வியாபாரிகள் ஆகியோரது நடமாட்டமும் இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்கு அங்கு யாரையும் பார்க்க முடியாது.