பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 எஸ். எம். கமால் அந்த வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினால், இவர்கள் மெளனமாக வேலியைக் கடந்து தோப்பிற்கு வெளியே சென்றனர். பின்னர் தங்கள் குதிரைகளில் ஏறி வடக்கே செல்லும் சேது வழிப் பாதையில் முடிவீரன்பட்டினம் நோக்கிச் சென்றனர். இன்னொரு பிரிவினர். தெற்கே நாகாச்சி சத்திரம் நோக்கி விரைந்தனர். இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரன் சில நிமிடங்கள் கழிந்த பின்னர், தனது வலதுகையினால் வாயின் மேல் விரலை மறைத்தவாறு நாக்கினால் ஒருவகையான ஒலியை எழுப்பினான். அமைதியான அந்த தோப்பு பகுதியில் அந்த ஒலி மிகத் தெளிவாக எதிரொலித்தது. அந்த ஒலிைையக் கேட்டவர், செம்பொத்து பறவை தனது இணையைக் கூவி அழைக்கிறது என்றுதான் நினைக்கக்கூடும். ஆனால் இது சமையல்கார ஊமையின் ஒலி என்பதை அந்த மூவரும் அறிந்து அவர்கள் ஒளிந்து இருந்த மரங்களில் இருந்து இறங்கி வந்தனர். - அந்த மகாராஜா அங்கு கிடந்த மூங்கில் கட்டிலில் அமர்ந்தவுடன் வீரபாண்டியனும் இராமுவும் அ.நந்தக் கட்டிலின் எதிரே இருந்த மரத்தடியில் உட்கார்ந்தனர். "இரா.மு இப்பொழுது சொல். இராமநாதபுரம் கோட்டையில் என்ன நடந்தது?" 彎彎彎