பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவாக மன்ன ரது - ੋਕ੍ਸar அழகு மாளிகை, அரண்மனை என வழங்கப்பெறும். இந்த அரண்மனையின் பிரதான துழை வாயில் ஆசாரவாசல் ஆகும். மறவர் சீமையில் தலைநகரான இராமநாதபுரம் கோட்டையில் இருந்து கோலோச்சிய சேதுபதி மன்னர்களில், வீரவடிவாக ஈருநெஞ்சிவிராக வாழ்ந்து சிறப்புற்ற திருமலை ரஸ்ககுநாத சேதுபதியை இந்தப்புதின மாளிகையில் புகழ் பூத்த நாயகராக புனையப்பட்டுள்ளது. இந்த ஆசார வாசலில் இருந்து அந்த மன்னரது வாழ்க்கையை உற்று நோக்கும்பொழுது இந்த மன்னர் ஒரு மிகப் பெரிய வீரர் என்பதும், தமிழுக்கு உருகும் தயாளர் என்பதும், இராமேசுவரம் திருக்கோயிலில் சிறந்த திருப்பணிகள் இயற்றிய திருத்தொண்டர் என்பதுடன் ஆடல் கலையில் வல்லமை பெற்றுது "பரத நாடகப் பிரவீண" என்ற விருது பெற்றவராகத் திகழ்ந்தார் என்பதையும் அறியமுடிகிறது. இந்த மன்னர் மதுரைப் பேரரசின் மன்னராக திருமலை நாயக்கரது நாட்டையும் நாட்டு நலனையும் மதித்து, அவரை எதிர்த்து கிளர்ச்சி செய்த எட்டியபுரம் பாளையக்காரரை அடக்கி மதுரை மன்னரது செல்வாக்கை நிலைநாட்டுகிறார். அடுத்து, மதுரைச் சீமையைக் கைப்பற்ற விரைந்து வந்த கன்னட நாட்டுப் பெரும்படையை திருமலை நாயக்கரது வேண்டுகோளின்படி அம்மைய நாயக்கனுர் போரில் அழித்து ஒழித்து மதிரை மண்டலத்தை கன்னடியர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுகிறார். சேதுபதி மன்னரது இந்த மாபெரும் சாதனையை நினைவு கூரும் பாராட்டு விழாவில் மதுரை சமஸ்தான ராஜநர்த்தகி கலாதேவு மன்னருக்கு அறிமுகமாரிறார். அவளது கலைத் திறமையை மிகவும் பாராட்டிய சேதுபதி மன்னருக்கும் கலாதேவிக்கும் இடையில் கலைத் தொடர்பு வலுக்கிறது. இராமேசுவரம் திருக்கோயில் இரண்டாவது பிரகார அமைப்பு நிறைவு விழாவில் கலந்துகொண்டு நாட்டியமாடிய கலாதேவி சேதுபதிகளின் இராமநாதபுரம் சமஸ்தான ராஜநர்த்தகி. யாகிறாள். இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வாழ்ந்து வந்த