பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 எஸ். எம். கமால் II - i. # # * = # அஞ்சுகோட்டை நாட்டைச் சேர்ந்த உனக்கு இலங்கையில் என்ன வேலை?" J - II "பிழைப்பிற்காகச் சென்றேன் "இந்த சேது நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்கான வழியா இல்லை?" "ஆம் மகாராஜா பிழைப்பதற்கு வழி இல்லைதான். வானம் பார்த்த எங்களது பகுதியில் மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினால்தானே மக்களுக்கு வேலை. மற்ற காலங்களில் எங்களது பசியைப் போக்க உப்புத் தண்ணிர்தானே உள்ளது. என்னைப் போன்றவர்கள் சோழ சீமைக்கும், இலங்கை நாட்டிற்கும் ஒடிச் சென்றால்தானே குடும்பத்தினரை வாழச் செய்ய முடியும்" "உனது குடும்பத்தில் உன்னைத் தவிர உழைக்கக் -- - --- II கூடியவர்கள் இல்லையா? "உழைக்கக் கூடியவர்கள் இல்லை. எனது பாட்டன் ஆளஞ்சாத் தேவர், இராமேசுவரம் போரில் சேது நாட்டின் மானத்தைக் காப்பாற்ற போரிட்டு வீர மரணம் அடைந்தார். எனது தந்தை அமரடக்கித் தேவர் மகாராஜா தலைமையில் அம்மைய நாயக்கனுார் போரில் கன்னடப் படைகளுடன் போரிட்டு மடிந்தார். அந்தப்போரில் காயமுற்று ஒருகையை இழந்த எனது சிறிய தந்தை இன்னும் என்னுடன்தான் வாழ்ந்து வருகிறார். எனது பாட்டனாருக்கு அளிக்கப்பட்ட உதிரப்பட்டியையும் எனது தந்தைக்கு அளிக்கப்பட்ட சீவித காணியையும் நான் திரும்ப ஒப்படைத்துவிட்டேன்." ΙΙ ஏன்?