பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 119 "எனது பாட்டனார் ஆளஞ்சாத்தேவர் பிறந்த மண்ணின் மானம் காக்கப் பேராடினார் மரணமுற்றார். மன்னரது உதிரப்படி கிடைத்தது. இராமநாதசுவாமியின் புனித பாதம் பட்ட சேது நாட்டின்மீது போர் தொடுத்து இராமேசுவரம் போரில் கணக்கற்ற மறக்குடியினர் மரணமடையக் காரணமான திருமலை நாயக்கருக்காக, அம்மைய நாயக்கனுர் போரில் கன்னடப் படையை எதிர்த்துப் போரிட்டதற்கு பரிசாக ஜீவித காணியைப் பெற்றுக்கொள்வதென்பது மனம் கொள்ளாத செயல் அல்லவா? அதனால்தான்...." "அப்படியானால் இந்த நாட்டு அரசியல் மக்களுக்காக அல்லாமல் மக்களை அழிப்பதற்காகவா நடைபெறுகிறது" "மன்னரது செயலை விமரிசனம் செய்யத் தகுதியற்றவன் நான். ஆனால் மன்னரது ஆணையை மதித்துத்தான் எனது தந்தையும் போருக்குச் சென்றார். அதன் விளைவாக ஊனமுற்றும், வேலையற்றும் ஊர்களில் முடங்கிக் கிடக்கும் வேதனையைத்தான் இங்கே வெளிப்படையாகச் சொன்னேன்." "சரி இரவு நேரத்தில் பாம்பனில் கரை இறங்கியதன்

  • ...To காரணம்?

"மன்னாரில் இருந்து தாமதமாகப் புறப்பட்ட தோணியில் பயணமாக வந்தேன். காலை கும்மிருட்டில் புங்கடித்துறை என்று நினைத்து கப்பல்காரன் தவறுதலாக பாம்பன் கரையில் என்னை இறக்கிவிட்டான். புங்கடியில் இருந்து பேய்க்கரும்பிற்கு செல்ல வேண்டியவன்...." "பேய்க்கரும்பில் யார் இருக்கிறார்கள்?" மன்னரது கேள்விக்கு பதில் சொன்னான்.