பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 எஸ். எம். கமால் "எனது கொள்ளுப்பாட்டன் செம்மன்த் தேவர் பேய்கரும்பில் இருந்தார். தளவாய் சேதுபதி மன்னரது இராமேசுவர முன்னணியில் படைப்பிரிவில் பணியாற்றியவர். பலவருடங்களாகத் தொடர்பு இல்லாததால் அவர்களது உறவினர்களைச்சந்திக்க அங்கு செல்ல எண்ணி இருந்தேன். அதற்குள்ளாக பாம்பன் கோட்ட்ைச சேர்வைக்காரர் என்னை இங்கு அனுப்பி வைத்துவிட்டார்." "அவர் சந்தேகப்பட்டதில் தவறு இல்லை என்றாலும் இப்பொழுது நேரம் கடந்துவிட்டது. இன்று இரவு லட்சுமிபுரம் சத்திரத்தில் தங்கிவிட்டு நாளை நீறு நினைத்தபடி பேய்க்கரும்பு செல்லலாம். பிரதானி இவருக்கு கடவுச் ட்டு வழங்கி லஷ்மிபுரம் சத்திரத்துக்கு அனுப்பிவையுங்க"

: : : :

'இதுதான் இராமநாதபுரம் கோட்டையில் நடந்தவை. அடுத்த நாள் காலை லஷ்மிபுரம் சத்திரத்தில் மண்டபம் தோணித்துறை சத்திரத்திற்கான வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கிழக்கு நோக்கிப் புறப்பட்டேன். நாகாச்சி பேய்ராமத்தேவன்மடம் வரும் பொழுது நன்கு இருட்டிவிட்டது. இரவு அங்கு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டேன். நீண்ட நேரம் வைகை ஆற்றங்கரையில் காத்து இருந்தும் படகு ஒட்டி வராததால் வைகை ஆற்றை நீந்திக் கடந்து வந்தேன்." "ஆமாம். உமது பேச்சைப் பொறுமையாகக் கேட்ட சேதுபதி மன்னர், இப்பொழுது ஏன் உன்னைத் தொடர்ந்து வீரர்களை அஸ்னனுப்புகிறார் பார்த்தாயா?" "ஆமாம். அதுதான் அரசியல் தந்திரம். பேச்சில் இருந்து நான் ஒரு கலகக்காரன் என்பது புரிந்து இருக்கும். தனது ஆட்சிக்கு என்னால் இடைஞ்சல் ஏற்படலாம் என்பதை அறிய எனது நடமாட்டத்தைகக் கண்காணிக்க இந்த ஏற்பாடு."