பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 123 சவுக்கைக்கு வெளியே திண்ணையில் பூந்தொட்டிகளில் வளர்ந்து மடல் அவிழ்ந்த ரோஜாமலர்கள் அங்கு பூத்து இருந்தன பிரதானியைப் பார்த்து புன்னகை செய்துகொண்டிருந்தன. அப்பொழுது சேதுபதி மன்னர் விருந்து மண்டபத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். சவுக்கையின் அழகிய சிறுபடிக்கட்டுகளில் இருந்து சவுக்கைக் கூடம் வரை விரிக்கப்பட்டு இருந்த சிவப்பு வண்ண நடைபாவாடை மீது நடந்து வந்ததைப் பார்த்த பிரதானி, "மகாராஜா வணக்கம்" மரியாதையுடன் கைகூப்பி, தலை கவிழ்த்தி கும்பிட்டார். மனனரும் கும்பிட்டுவிட்டு, கூடததன தெற்குப் பகுதியில் உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்தார். மன்னரைத் தொடர்ந்து வந்த பிரதானி அந்த இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த அழகிய சிறு கட்டிலின் அருகே பவ்யமாக நின்றார். "கோவில் விழாவிற்கான ஏற்பாடுகள் எந்த அளவில் I - * = * உள்ளன" மன்னர் கேட்டார். "புதிய பிரகாரத்தில் அலங்கார வேலைகள் நடந்துகொண்டு இருந்கின்றன. நாளைக்குள் அந்தப் பணி முடிந்துவிடும். பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் சுவாமியையும் அம்பாளையும் ஆரோகணித்து வைத்து இருப்பதற்கான சிறிய மேடையும் அதனையொட்டினாற்போல் சதிர்க்கச்சேரிக்கான மேடையும் அமைக்கப்பட்டுளளன.