பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 எஸ். எம். கமால் ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு தயார் செய்யவும் ஆவன செய்யப்பட்டுள்ளன. நமது நாட்டு பாளையக்காரர்களுக்கு தங்குமிடமும்,சாப்பாடு வசதியும் தனியாக ஏ ற்படுத்தப்பட்டுள்ளன. "சரி அந்த அஞ்சுகோட்டை தேவரைத் தேடிச் சென்றவர்கள் வந்துவிட்டார்களா?" "நாகாச்சிவரை வீரர்கள் ஒன்றாகச் சென்று தேடியதில் பயன் ஒன்றும் இல்லை. ஒருபிரிவு சேதுமார்க்கத்தில் ஆற்றங்கரை நோக்கிச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை திரும்பவில்லை. நாகாச்சியிலிருந்து கிழக்கு நோக்கி சென்றவர்கள் இரவு திரும்பிவிட்டனர். செய்தி எதுவும் கிடைக்கவில்லை. வடக்கே சென்றவர்களை நாளை எதிர்பார்க்கலாம்." "எதற்கும் கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் பாதுகாப்பு பலமாக இருக்கவேண்டும்" "உத்தரவு" பிரதானியின் பணிவான குரலில் மன்னரது அறிவுரையை ஆமோதித்தார். "இப்பொழுது நீங்கள் சென்று வேலைகளை கவனியுங்கள். மாலையில் சந்திப்போம்" II = = iI சமுகம உததரவு பிரதானி சவுக்கையைவிட்டு வெளியே சென்றார். சவுக்கைக்குள் வெள்ளித் தட்டில் வைத்து ஒரு செம்பையும், குவளையும் எடுத்து வந்தார் கார்வார். "மகாராஜா."மன்னர் முன் நின்று குணிந்து மரியாதை செலுத்தினார்.