பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 125 உம்". மன்னரது ஒப்புதலாகக் கொண்டு, செம்பில் இருந்த மோரை குவளையில் நிறைத்து மன்னர் அருகில் இருந்த சிறிய கட்டிலின் மீது வைத்தார். மன்னர் அந்த மோரினை எடுத்து குடித்து முடித்தவுடன் மீண்டும் குவளையை நிரப்பி வைத்தார். அதையும் மன்னர் அருந்திய பின்பு கார்வார் சவுக்கையின் பின்புறமாக இருந்த சமையல் அறைக்கு சென்றார். மன்னரும் கட்டிலில் இருந்த ஒரு ஒலைக் கட்டை எடுத்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அன்று வெள்ளிக்கிழமை. சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் சுவாமியும் அம்பாளும் சிவிகையர் சுமந்த சப்பரத்தில் புதிய இரண்டாம் பிரகாரத்தில் உலா வந்தனர். சிறப்பர்ன அலங்காரங்களுடன் முதன்முறையாக புதிய இரண்டாம் பிரகாரத்தில் எழுந்தருளிய தெய்வத்திரு மேனிகளை சன்னதிகளின் வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் பகுதிகளில் மக்கள் திரளாகக் கூடி நின்று தரிசித்து மகிழ்ச்சியடைவதற்கு ஏற்றர்ற்போல் சில நிமிடங்கள் சப்பரத்தை அங்கெல்லாம் நிறுத்தினர். அப்பொழுது பஞ்சகச்சமாக வெள்ளைப்பட்டு வேட்டியும், குங்கும வண்ண தலைப்பாகையும் அணிந்து, புஜங்களிலும் மார்பிலும் திருநீறும் குங்குமமும் கையில் வெள்ளித் தடியுடனும் காட்சியளித்த கட்டியம் சேதுபதி மன்னர்கனது விருதாவளிகளைத் தெளிவாக உர்த்த குரலில் சொல்லி வந்தார். திவெட்டிகளுத்தில் என்னை ஊற்றப்பட்டபொழுது அவை கூடுதல் பிரகாசமாக ஒளியூட்டியதுடன் தெய்வத் திருமேனிகளை அலங்கரித்த திரு ஆபரணங்களில் அமைந்து இருந்த விலை மதிப்பற்ற நவமணிகளின் பச்சை, நீல. இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை, நிறங்களை எதிரொளிக்குமாறும் செய்தமை காண்பவர் கண்களைக்கூசச்செய் Аббот,