பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - எஸ்.எம். கமால் ராஜ நர்த்தகி கலாதேவி தேவலோக ரதிபோல அழகிய ஒப்பனைகளுடன் வந்து சேதுபதி மன்னரை வணங்கிவிட்டு, சபையோருக்கும் வணக்கம் தெரிவித்தாள். அவளது நடனத்துக்கென மரப் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவள் சென்றவுடன் வாத்தியக்காரர்களது கூட்டு இசை நாட்டியமாவெரது அபிநயத்திற்கு ஏற்ப இணைந்து ஒலிக்கத் தொடங்கியது. 5லாதேவி நாட்டியம் ஆடினாள். இவ்விதம் சொல் தைவிட அன்றைய அந்த நிகழ்ச்சிகளில் கண் குளிரக் கண்டு கொண்டிருந்த அனைவரையும் இரண்டு நாழிகைக்கும் மேலாக, ஒரு கற்பனை குழலில் அவர்களது கண்களையும் கருத்தையும் காற்ற த்துள்ளித்துள்ளி கழன்று ஆடும்படி செய்தாள் என்பதுதான் த்தமாகும். "பொன்னுக்கு அழகு செய்ய பொட்டிட்டுப் பார்ப்பது" என்பது சேது நாட்டு வழக்கு இயற்கையாக ஒரு பெண்ணின் அழகு அவளது முகத்தில் இடப்படும் தி.க தி எல் இன்னும் மிகுதியான அழகுடன் விஞ்சி நிற்கிறது என் தை வலியுறுத்துவதற்கானது அந்தப் பழமொழி" ஆந்திர நாட்டு அழகுமகளான கலாதேவி இயற்கையிலேயே வனப்பும், வசிகரமும் நிறைந்து காணப்பட்டாள். கருங்குழல் மூடிய தலை, விண்னே சக்கி விரிந்து மண்ணோக்கி விளையாடும் கண்கள். கழிந்து நெளிந்த நிறைபுருவம். வாள் வீச்சையும்,வேல்பாய்ச்சலையும் மழுக்கிவிடும் பார்வை வயிரமணிக் கழுத்து, துடித்த மார்பு, துலங்கு கரம். இவைகளுக்கு துணையாகும் தோள். கைம்மணம் காட்டும் காந்தள் விரல்கள். இல்லாதது ே பால இருக்கின்ற இடை. மருங்கிணைந்த தொடையில் நெருங்கும், நெகிழும், விலகும் ஆடை .