பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 127 இந்த அழகு ஒவியத்தை வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்தவர்களுக்கு அவள் ஆடிய நடனம், மனம் முந்தியதோ விழி முந்தியதோ அல்லது கரம் முந்தியதோ அல்லது கண்கள் முந்தினவோ என நிச்சயிக்க முடியாத களி நயங்கள், ஒருவித ஆழமான அதிசய உணர்வை நிறைத்தன. "மருமலர்க் களபம் கமகம கவென மணிவளை கலகல வென திரளொளி நகைகள் பளபள வெனத் தேகசுந்தரம் தளதளவென தரை பதமழுந்த தொடுதொடென" என கவிஞர்கள் வர்ணிப்பது போன்ற கலாதேவியின், கால்கள் மேடையை மிதித்து எழுப்பும் இசையும் அதற்கு இணையாக இணைந்து ஒலித்த மத்தளம், கைமணி,குழல், வீணை, செண்டை ஆகியவைகளில் ஒலியும் நின்றபொழுதுதான் மன்னரும் மக்களும் நிகழ்ச்சி முடிவுற்றதை உணர்ந்தனர். நிறைவுபெறாத மனத்துடன் கலக்கம் தேங்கிய கண்களுடன் மேடையை நோக்கினர். மேடையில் இருந்து இறங்கி வந்து, மன்னர் முன் பவ்யமாகப் பணிந்து நின்ற கலாதேவிக்கு மன்னர் நவகண்டி மாலையொன்றைப் பரிசளித்தார். அதனைக் குனிந்து கழுத்தில் சூட்டிக்கொண்ட பொழுது, அவளது கண்கள் களிப்பின் உச்சத்தில் தத்தளிப்பதை மன்னரும் கண்டார். அவளைத் தொடர்ந்து அவரது குழுவினரும் மன்னரை வணங்கி அவர் அளித்த பொற்கிழிகளைப் பெற்றுச் சென்றனர். இராமேசுவரம் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத் திருப்பணி நிறைவைக் குறிக்கும் இந்த விழா, நடன நிகழ்ச்சிடன் நிறைவுபெற்றதை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் பேசிக்கொண்ட -வர்களாகக் கலைந்து சென்றனர்.