பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது இராமநாதபுரம் மகாராணிக்கு நெருக்கமான நட்பிற்கும் வாஞ்சைக்கும் உரியவளானதுடன் இளந்துறவி ஒருவரது இசையில் மயங்கி அவளது மனத்தை அவரிடம் பறிகொடுத்துவிடுகிறாள். இதற்கிடையில் சேதுபதி மன்னரை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற சதிகாரர்கள் இயல்கின்றனர். சதிகாரர்கள் பற்றிய துலக்கமான துப்பு கிடைக்காத நிலையில், மன்னரது இராமேசுவரம் திருக் கோவில் திருப்பணிகளும், திருப்புல்லாணி திருக்கோயில் கட்டுமானப்பணிகளும் தொடர்கின்றன. இதைப்போன்று கலாதேவியின் இளந்துறவி சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியில் சேதுபதி மன்னர் சதிகாரர்களால் இனங்கண்டு அவர்களை தண்டித்தாரா? மகாராணிக்கும் கலாதேவிக்கும் இடையில் வாஞ்சையும் உறவு என்னவாயிற்று. இளந்துறவியிடம் இதயத்தை பறிகொடுத்த கலாதேவியின் காதல் நிறைவேறியதா? சேதுபதி மன்னருக்கான சதிகளில் சம்மந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்களா? இந்த வினாக்களுக்கு விடைகளை அறிய இந்தப்புதினப் பக்கங்களைப் புரட்டிச் செல்லுங்கள்!

{-t}:{-t}:{-t}:{-t}: