பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 எஸ். எம். கமால் மறுநாள் காலை. இராமேசுவரம் அரண்மனையில் பெருங்கட்டம் திரண்டு இருந்தது. குடிமக்கள் ஒவ்வொருவராக உலுப்பைப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மன்னரிடம் விடைபெற்றுச் சென்றனர். நடுப்பகல் வரை சவுக்கையில் இருந்து பாளையக்காரர்களுக்கு பேட்டியளித்து முடித்த பிறகு மன்னர் பிரதானியை நோக்கினார். அந்தப் பார்வையில் அடங்கிய பொருளினைப் புரிந்துகொண்ட பிரதானி, "மகாராஜா நேற்று முன்தினம் உப்பூர்வரை சென்ற வீரர்கள் இன்று காலையில்தான் திரும்பினார்கள். அவர்கள் சேகரித்துள்ள தகவல்படி, ஆற்ற கரைக்கும் முடிவீரன் பட்டினத்திற்கும் இடைப்பட்ட கடற்கரையில் சில நாட்களாக அந்நியர்கள் நடமாட்டம் இருந்து வருகிறதாம். இன்னும் துலக்கமான தகவல்களைப் பெறுவதற் த முடிவீரன்பட்டினத்து மீனவர்களில் ஒருவரை உளவு பார்த்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது." "சில நாட்களாக... சில அன்னியர்கள் .... அவர்கள் யாராக இருக்கக் கூடும். அவர்களது நடமாட்டம் எதற்காக... . உம்..." மன்னர் தெளிவற்ற நிலையில் இருந்தார். "மகாராஜா கிழக்கு, தெற்கு கடற்கரையில் சில சமயங்களில் இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்து இறக்குவார்கள். நமது நாட்டில் இல்லாத விளை பொருட்களான கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவைகளை இலங்கையில் இருந்து நமது நாட்டவர்கள்தான் கொண்டு வருவார்கள். ஆனால் நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள செய்தி, அவர்கள் அன்னியர்கள் என்பது. விரைவில் முழுவிபரமும் பெற்றபிறகு இதுபற்றி முடிவு செய்யலாம்."