பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 129 "அப்படியானால் இந்த இராமுத் தேவர் என்ன ஆனார்: எங்கு சென்றார்?" "நமது கிழக்குப் பகுதியில்தான் இருக்க வேண்டும். இந்த தீவிற்குள் இன்னும் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. பேய்க்கரும்பு சென்று வந்த உளவாளிகளுக்கு அங்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. மண்டபம் தோணித்துறையிலும் பாம்பன் துறையிலும் பயணிகளை நோட்டமிட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது." "சொந்த ஊர் அஞ்சுகோட்டை நாட்டு ஓரியூர் என்றுதானே அவன் தெரிவித்துள்ளான்" "ஆம், பாம்பன் கோட்டை சேர்வைக்காரரது ஒலையிலும் அப்படித்தான் வரைந்து இருக்கிறார்." "ஒரியூர் கோட்டைத் தளபதிக்கு இலை அனுப்பி இராமுத் தேவன் பற்றிய விவரங்களை பத்து நாட்களுக்குள் சேகரித்து அறிக்கை அனுப்புமாறு தெரிவியுங்கள்." "சமுகம் உத்தரவு" "பிசாகமுந்தல், மாங்காடு, புங்கடி பகுதிகளைப் பார்வையிட்டு அங்கே யாழ்ப்பாணத்துடன் வணிக வசதிகளைப் பெருக்க பன்டகசாலைகளை அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை நேரில் கண்டறிய வேண்டும். நாளைக் காலையில் விளாபூஜை முடிந்தவுடன் புறப்பட வேண்டும். குதிரை அணி ஒன்று ஆயத்தமாகட்டும்." "உத்தரவு, அப்படியே செய்கிறேன்." "நாளை காலையில் சந்திப்போம்" என்று கூறிவிட்டு சவுக்கையில் இருந்து மன்னர் விருந்து மண்டபத்திற்குள் சென்றார். அரண்மனைக் கார்வார் அவரை பின்தொடர்ந்து சென்றார். § {} {}