பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 131 நாச்சியார் சென்றார். நந்தவனத்தில் மகாராஜா இருப்பதைப் பார்த்த அவரது பணிப் பெண்கள் நந்தவனத்திற்குள் நுழையாமல் வெளியே நின்றுவிட்டனர். - உள்ளே சென்ற மகாராணியார், மன்னர் அமர்ந்து இருந்த நாற்காலியின் அருகே சென்றார். அவர் வந்ததைக்கூட உணராத நிலையில் மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். II I. மகாராஜா காற்றின் சிறு கிலுகிலுப்பு இசையைத் தவிர முழுமையான அமைதியுடன் விளங்கிய அந்த நந்தவனச் சூழ்நிலையில் ராணியாரின் மிருதுவான நெருடல் மன்னரது சிந்தனையினின்றும் அவரை விடுவித்தது. "மகாராணியா ருக்கு இங்கே வருவதற்குக் கூட நேரம் கிடைத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதே." "என்ன செய்வது இராமேசுவரம் திருவிழாவிற்குச் சென்று திரும்பிய இந்த மூன்று நாட்களாக இங்கு சரியான வேலைகள். நேரம் போனதே தெரியவில்லை." "ஆமாம். புதிய சினேகம். ராஜநர்த்தகி கலாதேவியுடன் அளவளாவுவதற்கே நேரம் போதாதுதான்" மன்னர் குறும்பாகச் சொன்னார். - "அதற்குத் தாங்கள் தானே காரணம். மதுரை சமஸ்தான ராஜநர்த்தகியை மறவர் சிமையின் ராஜ நர்த்தகியாக்கியதுடன், எங்களது அந்தப்புரத்துக்கு அருகிலேயே,