பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 எஸ். எம்.கமால் விருந்து மாளிகையில் அவளைக் குடியிருக்கச் செய்ததும் தாங்கள்தானே!" சேதுபதி மன்னருக்கு கலாதேவி மேல் உள்ள கரிசனத்தை குத்திக் காட்டுவது போல இருந்தது மகாராணியின் சொற்கள். "கலாதேவி, மதுரை இராமநாதபுரம் சமஸ்தான த்துக்கு மட்டுமல்லாமல், நாட்டிய உலகிற்கே கிடைத்துள்ள அரிய கலைப் பொக்கிஷம். அவள் அன்மீகத்திற்கு மட்டுமல்லாமல் மொழி வளர்ச்சிக்கும், கலைப் பெருக்கிற்கும், சேது ஆதீனம் முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளது. கலாதேவி கலையரசியாக விளங்க வேண்டும் என்பது எனது ஆசை. அதன் ஒரு உதவியாக மன்னர் திருமலை நாயக்கர் மறைந்தபிறகு ஆதரவின்றி தடுமாறிய கலாதேவியை நமது நாட்டிற்கு அழைத்து புகலிடம் கொடுத்துள்ளேன்." "அதுசரி. இப்பொழுது எந்தக் கோட்டையை பிடிக்க இவ்வளவு பெரிய தனிமைச் சிந்தனை?" "பிடிக்க வேண்டிய கோட்டையெல்லாம் பிடித்தாகி விட்டது. இனியும் இந்த நாட்டு மக்களின் குருதி சேது மன்னரது பேராசைக்காக பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து சிடாது. மாறாக இந்த நாட்டு மக்கள் இயல்பான வாழ்க்கை முறைகளில் ஈடுபட்டு சேதுநாட்டின் அனைத்து வளங்களையும் பெருக்க வேண்டும் வானம் பார்த்த பூமி என்ற வசை மாறி வளம் நிறைந்த பூமி என்ற புகழ் பரவ வேண்டும்." "மிகவும் மகிழ்ச்சி"