பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - எஸ். எம். கமால் " நாம் ஈடுபட்டுள்ள செயல் மிகவும் புனிதமானது. நமக்காக நாம் பாடுபடவில்லை. நமது மறவர் பெருங்குடியின் மானத்தைக் காப்பாற்றும் சமுதாயத் தொண்டாகக் கருதித்தான் அதில் ஈடுபட்டுள்ளோம். நேரடியாக மதுரை நாயக்கர்களுடன் போராடி வெற்றி கொள்ள. ஆதலால் அந்த மதரை அரசுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறவர் சீமை வடுகனது கைப்பொம்மை அல்ல என்பதை நமது மறக்குடிமக்களுக்கு புரியும்படி செய்வோம். செய்து வருகிறோம். இதற்கு இன்னும் பெரிதாக அமைக்கப்பட வேண்டும். இந்த இறுதிப்போருக்குத் தேவையான வைகளை விரைந்து சேகரிக்க வேண்டும். இந்த இரு செயல்களும் எனிதானது அல்ல என்பதனை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள். " ஆமாம். தாங்கள் சொல்வது அனைத்தும் எங்களுக்கு உடன்பாடானவையே. ஆனால் இப்பொழுது என்னைப் பற்றித் தீவிரமாக விசாரனை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் காலங் கடந்து போவது தான் எங்களுக்குப் பயயாக இருக்கிறது. இராமுத் தேவன் மீண்டும் தனது அச்சத்தை வெளியிட்டு சொன்னான் I நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அத்துடன் பயப்படுகிறேன். நமது திட்டங்கள் எங்கே...? என்று வீரபாண்டியன் சொல்லி முடிப்பதற்குள் பெரியவர் குறுக்கிட்டுப் பேசினார். "நிச்சயமாக வெற்றியடையும். விரைவில் நமக்குத் தேவையானவைகள் கிடைக்கும். கடற்கரைப் பகுதியில் மட்டும் அல்லாமல் உள்நாட்டிலுள்ள மறவர்குடி மக்களில் கணிசமான பேரை நமது அணிக்குக் கொண்டு வந்து விடுவோம். இப்பொழுது நமது இலட்சியம் நிறைவேறிவிடும். மறவர் சீமை அரசு, மறவர்களது பெருமைக்கும் புகழுக்கும் அரணாக விளங்கும். ஆம், மறவர் சீமை II .....T F لاقے