பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 137 உணர்ச்சி வசப்பட்டவராகப் பெரியவர் மேலும் பேசமுடியாமல் நிறுத்தினார். II "ஐயா! ஐயா! .... இராமுத் தேவர் பெரியவரை அழைத்தான். அவனது குரலில் சற்று கலக்கமும் பயமும் கலந்திருந்தது. "ஒன்றுமில்லை....ஒன்றுமில்லை...இராமு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அவ்வளவுதான்" என்று சொல்லியவாறு தமது வலது கையினால் மீசையின் நுனிகளை முறுக்கிக் கொண்டார். "மகாராஜா சிறிது தண்ணிர் குடிக்கலாமா? இதோ எடுத்துவருகிறேன்." குடிசைக்குள் நுழைந்த வீரபாண்டியன் கையில் தண்ணிர்ச் செம்புடன் வந்தான். இரண்டு மடங்கு தண்ணிரைக் குடித்துவிட்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார் பெரியவர். வீரபாண்டியன் பேச்சைத் தொடங்கினான். "அடுத்து எப்பொழுது புறப்படலாம்" "நாளை இரவு முதல் சாமத்தில் இருந்து சரக்குகளை எதிர்பார்ப்போம். நாளைக் காலையில் சேதுக்கரையில் இருந்து படகு வரும் அதில் நாம் தொண்டி செல்லலாம்." "மகாராஜா ஒரு விண்ணப்பம்" வீரபாண்டியன் பணிவுடன் கூறினான். நளைக் காலை தை அமாவாசை சேதுக்கரை கடலில் குளித்து திருப்புல்லாணிப் பெருமாளையும் தரிசித்துவிட்டு, அந்திக்குள் இங்கு திருப்பிவிடுவேன்"