பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 எஸ். எம். கமால் "நல்லது. இப்பொழுது நீ புறப்படு. நானும் ராமுவும் கடற்கரை பக்கம் சென்று வருகிறோம்." பெரியவரை வணங்கிவிட்டு, வீரபாண்டியன் தோப்பிலிருந்து சென்றான். சற்று தொலைவில், தோப்பின் வேலியைச் செம்மை செய்து கொண்டிருந்த தோப்புக் காவல்காரரை பெரியவர் அழைத்தார். இரவு சாப்பாடு சம்மந்தமாக ஏதோ சொல்லிய பிறகு தனுக்கோடி இராமுத் தேவருடன் கடற்கரைநோக்கிச்சென்றார். கடற்கரையில் காற்று முன்னைவிட வேகமாக வீசியது. அவர்களது உறுதியான செயல்பாடுகளைப் போல. శ్లో శ్లో