பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 எஸ்.எம். கமால் இவையனைத்தையும் மறைமுகமாக தெரிவித்தான். அவனது தந்தைக்கு வழங்கப்பட்ட உதிரப்பட்டி சன்மானத்தை மறுத்து விட்டதாகச் சொன்னதும் அவனது தீவிரவாத சிந்தனையைத் தானே குறிக்கின்றது....? இப்பொழுது எங்கே அவன் இந்தச் சதிக்கும்பல் எங்கு இருக்கிறது?... . இப்படிப் பலவாறான சிந்தனையில் பிரதானியார் முனைந்து இருந்தார். அன்று மாலையில் பிரதானியார்.சேதுபதி மன்னரைச் சந்தித்த பொழுது அவரது இயப்பாடுகளை மன்னருக்குத் தெரிவித்து முந்தைய தளவாய் சேதுபதியின் மருமக்ன் நாரணத் தேவரது வழியில் ஒரியக் கோட்டைத் தளபதியாக ஆளஞ்சாத் தேவர். மன்னரது உறவினர் என்பதையும் மன்னருக்குத் தெரிவித்தார். அவர்களைப்போல் இந்த இராமுத்தேவனும், சேதுபதி பட்டத்தின் மீது குறிவைத்து இருக்கிறானா? இல்லை மதுரை. சொக்கநாத நாயக்கரது பொறாமையின் துரன்டுதலால் சேதுபதிக்கு எதிராக இயங்கும் சதிகளில் இவனும் ஈடுபட்டு இருப்பானா? அவர்கள் இன்னும் எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோர்கள்? அவைகளை எப்படித் தடுத்து அவர்களது சதித் திட்டத்தை முறியடிப்பது? இருவரும் நீண்டநேரம் இரவுசாப்பாட்டினைக்கூட மறந்தவர்களாக ஆலோசனை நடத்தினர். శ్రీ శ్రీ శ్లో