பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 எஸ். எம். கமால் சேதுபதி மன்னர் நீராவி அரண்மனையை அடுத்த சவுக்கைக்கு வந்துகொண்டிருந்தார். பிரதானி, அரண்மனை கார்வார். நாலைந்து பணியாளர்-களும் மன்னரைப் பின் தொடர்ந்து வந்தனர். மன்னர் சவுக்கைக்குள் இருக்கையில் அமர்ந்தார். ஏற்கனவே சவுக்கையின் திண்ணைப் பகுதியில் காத்து இருந்த கலாதேவி, "மகாராஜா நமஸ்காரம்" என்று பணிந்து சொல்லியவாறு சென்று, மன்னரது இருக்கை முன் முழந்தாளிட்டு வணக்கம் செலுத்தி எழுந்தாள். பிரதானியும் கார்வாரும் சவுக்கையின் வெளிப்புறம் முகப்பில் நின்று கொண்டிருந்தனர். "கலாதேவி" ஏதாவது விசேஷமுண்டா? ஒப்பனை இல்லாத ஒளிர் மரகதச் சிலை போன்ற அவளது உருவத்தை உச்சந் தலையில் இருந்து கணுக்கால் வரை அவரது பார்வை சென்று திரும்பியது. அடுத்து நேரடியாக அவனது கண்களையே விடை கேட்பது போல் பார்த்தார். "மகாராஜா. நான் மதுரைக்குச் சென்று வரவேண்டும். சமுகம் உத்தரவுக்காக . . . . . II குழறியவா று குழந்தை போல அவள் சொன்னாள். "திருமலைநாயக்கருக்குப்பின் மதுரை மாநகரம் களை இழந்து விட்டது. நாயக்கர் சமஸ்தானமும் இப்பொழுது ச்சிராப்பள்ளிக்கல்லவா மாறிவிட்டது." மன்னர் சொன்னார். திருச்சிர து りr "ஆம், மகாராஜா, சொல்வது சரி..ஆனால் நான் சொந்த விஷயமாகச் சொல்ல விரும்புகிறேன்." " சொந்தமா பெணு கொண்டா பாக்யலவதிமிகாரு புத்திரி கலாதேவிக்கு மதரையில் சொந்தக்காரர்கள் இல்லையே இராமநாத