பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 145 புரத்தில் நாங்கள் மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று நினைத்து இருக்கிறோம். சிரித்துக் கொண்டு மன்னர் சொன்னார். கலாதேவியின் இதழோரத்திலும் ஒரு பன்சிரிப்பு நளிந்தது. கண்களிலும் அதன் ஒளி பளிச்சிட்டது. "தன்யனானேன் ஆந்திர தேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எனது ஒவ்வொராண்டும் ஜென்மத்தினத்தன்று கூடல் அழகர் பெருமாள் சேவடிகளை சேவித்து எனக்கு ஜென்ம சாபல்யம் அருளுமாறு வேண்டிக் கொள்வது வழக்கம். இத்தனை ஆண்டுகளும் மதுரையில் இருந்திருந்ததால் அது ஒரு அன்றாட நிகழ்ச்சி போல அமைந்தது. இந்த ஆண்டுதான் சேது நாட்டில் இருந்து சென்று வரவேண்டியதாக உள்ளது." "ஊடலும் வாடலும் இல்லாது ரீதேவி பூமிதேவி. யோடு கூடல் நகரில் செளந்தர்ய கந்தரனாக விளங்கும் அந்தப் பெருமாளைச் சேவித்து வருவதில் எனக்கும் திருப்தி தான். . . . சரி எப்பொழுது இங்கு திரும்புவாய்" இவ்விதம் கேட்கும் பொழுது மன்னரது பார்வையில் சிறு சலனம் இருந்ததை கவனித்தாள் கலாதேவி. "மகாராஜா மகாரானியரையும் தங்களையும் பிரிந்து இருப்பது என்பது எனக்கு மிகவும் கஷ்டமான காரியம்" என்று சொல்லிய பொழுது, கலாதேவியின் நெஞ்சத்தில் ஏதோ கனமான சுமை ஒன்று அழுத்துவது போல் சற்று ஸ்தம்பித்து நின்றதை மன்னர் கரிசனத்துடன் கவனித்தார். தொடர்ந்து சொன்னாள் கலாதேவி,