பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எஸ். எம். கமால் ' மகாராஜா திங்கட் கிழமை எனது ஜென்ம தினம் அன்று காலை பூஜை முடிந்தவுடன் பெருமாள் சன்னதியில் அமர்ந்து பாராயணம் செய்வேன். உச்சி கால பூஜையிலும் பெருமாளைச் சேவித்து விட்டு மாலையில் இராமநாதபுரம் புறப்பட்டு வந்து விடுவேன்.எப்படியும் பயணத்தில் எட்டு நாட்களாகி விடும். சரியாக பத்தாவது நாள் இங்கு சமுகத்தை தரிசிக்க வந்து விடுவேன்." "ஏன் மதுரையில் தங்கி பயணக் களைப்பை போக்கிக் கொண்டு ஆறுதலாகக் கூட திரும்பலாம். அங்கே தங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்." " அது அவசியமில்லை மகாராஜா போக்குவரத்து மட்டும் ஏற்பாடு செய்தால் போதுமானது." கலாதேவி வேண்டிக் கொண்டாள். " கார்வார்...... " மகாராஜாவின் அழைப்பு. கார்வார் ஒடோடி வந்து மன்னர் முன் பனிவாக நின்றார். 'சமுகம உத்தரவு" "பிரதானி எங்கே" "இதோ அழைத்து வருகிறேன்." "வெளியில் இருந்து பிரதானி வங்து வணங்கினார். T 'சமுகம் உத்தரவு"