பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 147 " பிரதானியரே! நமது நர்த்தகி மதுரை சென்று வர வேண்டும். நமது மரியாதைகளுடன் அவர் மதுரை சென்று திரும்ப ஏற்பாடு செய்யவும். அவரது சொந்தச் செலவிற்கு பொன்னும் கொடுத்து அனுப்பவும்."மன்னர் உத்தரவிட்டார். "தன்யளானேன், நாளை பிற்பகல் புறப்பட்டுச் செல்கிறேன். நமஸ்காரம்." கலாதேவி பணிந்து குனிந்து மரிய்ாதை செய்தாள். சவுக்கையின் கூடத்தைக் கடந்து செல்லும் வரை அவளையே மன்னர் பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் பிரதானியாரைப் பார்த்து, " புதிய செய்திகள் எதுவும் கிடைத்ததா." மன்னர் கேட்டார். II யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்ற பாம்பன் கூளப்பன்டகசாலை வியாபாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் டச்சுக்காரர்களது கிட்டங்கியில் இருந்து இரண்டு தோணி கொள்ளும் அளவு கருமருந்தை நமது ஆப்பனுார் நாட்டுத் தேவர் ஒருவருக்காக விலை கொடுத்து வாங்கி துறைமுகத்திற்கு பாரவண்டியில் ஏற்றிச் சென்றதைப் பார்த்ததாக பாம்பன் துறையில் கோட்டைச் சேர்வைக்காரிடம் சொன்னாராம். இந்தத் தகவலை அவர் நமக்குத் தெரிவித்து இருக்கிறார்." "ஆமாம், டச்சுக்காரர்கள் கருமருந்தை பெருமளவில் தனியாருக்கு விற்பனை செய்வது கிடையாது அல்லவா?" மன்னரது இந்தக் கேள்விக்கு பிரதானி பதில் சொன்னார்.